முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் விடுவிப்பு

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்தும் கன்னியாகுமரி மற்றும் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.
.இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு வருமாறு:  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

கட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் வரையிலும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரையிலும் மாவட்ட கட்சி பணிகளை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான முக்கூர்.என்.சுப்பிரமணியன் கூடுதலாக கவனித்துக் கொள்வார்.
கட்சியினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மற்றொரு அறிவிப்பில் கன்னியா குமரி மற்றும் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்தும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்படுவதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.இவருக்கு பதிலாக தொழிற்துறை அமைச்சர் பி.தங்கமணி நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை புறநகர் மாவட்ட தேர்தல் பொறுப் பாளராக நியமிக்கப்பட்ட பி.செந்தூர் பாண்டியன் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு அமைச்சர் பா.வளர்மதி அங்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து