முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி ஐகோர்ட்டில் மனு

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

சென்னை, மார்ச். 7: லிங்கப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு பெற்று அரசுக்கு ரூ. 21 கோடி இழப்பு ஏற்படுத்திய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த ஆர்.சிங்காரவடிவேலன் தாக்கல் செய்த மனு விவரம்:
நான் மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரராக உள்ளேன். நடிகர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதியில் விநியோகம் செய்வதற்கும் உரிமம் பெற்றேன்.

இந்ததப் படம் வெற்றியடையாததால் திரையரங்க உரிமையாளர்களுக்கு பெம் இழப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, எங்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பை ஈடு செய்ய பட தயாரிப்பு நிறுவனம், நடிகர் ரஜினி இருவரிடமும் கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர்கள் அதை ஈடு செய்ய முன் வரவில்லை. ஆனால், பட உரிமம் வழங்கும் போது தோல்விடையந்தால் அதை ஈடு செய்கிறோம் என உறுதி அளித்தனர்.

ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. கடந்த ஜனவரி மாதம் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, லிங்கா படத்தின் மூலம் தனக்கு லாபம் கிடைத்தாக பட தயாரிப்பு நிறுவன ராக்லைன் வெங்கடேசன் தெரிவித்தார். தயாரிப்பாளருக்கு இருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படு்ததி, லிங்கா படத்துக்கு தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு பெறப்பட்டுள்ளது. கேளிக்கை வரி விலக்கு அளிக்க அந்தப் படத்தின் பெயர் தமிழ் இருக்க வேண்டும், தமிழ் கலாசாரத்தை வளர்க்கும் விதமாகவும் இருக்க வேண்டும்.

ஆனால், லிங்கா என்பது தமிழ் பெயர் இல்லை. இது சமஸ்கிருத வார்த்தையாகும். இந்த கேளிக்கை வரி விலக்கு மூலம் தமிழக அரசுக்கு ரூ. 21 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, கடந்த 3-ஆம் தேதி சென்னைப் மாநகர போலீஸ் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நான் அளித்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous March 7, 22:27

    நஷ்ட ஈடுத் தொகை வேண்டுமா அல்லது? ரஜினியின் புகழ்லை கேடுக்க வேண்டுமா ? 2 மே நடக்காது

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து