முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா இடைத்தேர்தலில் போட்டி: பவன் கல்யாண்

சனிக்கிழமை, 7 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

நகரி - தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி ஆட்சியை பிடித்ததும் காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகிய கட்சி சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பலர் அக்கட்சிக்கு தாவினார்கள். இதில் சிலர் சந்திரசேகரராவ் அமைச்சரவையில் மந்திரிகளாக உள்ளனர். கட்சித்தாவல் தடை சட்டப்படி இவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெலுங்கானா சட்டசபை சபாநாயகர் வேணுகோபால் ஆச்சார்யாவுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
 
கோர்ட் நடவடிக்கையால் தெலுங்கானாவில் சில எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்படும் என்றும், அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானாவில் இடைத் தேர்தல் நடந்தால் அங்கு நான் போட்டியிடுவேன் என்று சிரஞ்சீவியின் தம்பியும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நான் போட்டியிட நினைப்பது எனக்காக அல்ல. எனது கட்சிக்காகத்தான். சிறந்த நோக்கத்துக்காக, லட்சியத்திற்காக கட்சியை ஆரம்பித்தேன். ஆனால் கட்சியை வளர்க்க தற்போது பணம் இல்லை. இருந்தாலும் எனது லட்சியத்தை நிறைவேற்ற நல்ல தலைவர்களை தேடுகிறேன். அதற்காக பாரதீய ஜனதாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். விரைவில் நானே களத்தில் குதிப்பேன் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, சிங்கப்பூர் போல தலைநகர் அமைக்க நிலம் சேகரிக்கப்படுவதாக சந்திரபாபு நாயுடு கூறினார். இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிங்கப்பூர் நிலைமை வேறு. நமது மாநில நிலைமை வேறு. தலைநகருக்காக விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்களை பிடுங்க அனுமதிக்க மாட்டேன். விவசாயிகள் தானாக முன்வந்து நிலம் கொடுத்தால் அதனை வரவேற்கிறேன். அதே நேரம் ஆண்களின் மனதில் உள்ள அச்ச உணர்வை நீக்க வேண்டும். நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் உதவிகள் தொடர்ந்துவரும் அரசுகளும் செயல்படுத்தும் வகையில் செய்ய வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து