முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 10 இடங்களில் நீர் - மோர் பந்தல்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

மதுரை - அதிமுக பொதுச்செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவின் ஆணைப்படி மதுரையில் 10 இடங்களில் அதிமுக சார்பில் நீர்- மோர் பந்தல்களை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.  கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும், மக்களின் தாகத்தை தணிக்கின்ற வகையிலும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நீர்-மோர் பந்தல்களை அமைத்து நீர்-மோர் வழங்க வேண்டுமென்று அதிமுக பொதுச்செயலாளரும்,மக்களின் முதல்வருமான ஜெயலலிதா ஆணையிட்டுஇருந்தார். அவரது ஆணையினை ஏற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நீர்-மோர் பந்தல்களை அமைத்து பொதுமக்களுக்கு வழங்கி அவர்களது தாகத்தை தணித்துவருகிறார்கள்.

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பகுதி வாரியாக மதுரை மாநகருக்கு உட்பட்ட  10 பகுதிகளில்  நேற்று நீர்-மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது. இதனை  மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும்,கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்து பொதுமக்களுக்கு  நீர்-மோர், தர்ப்பூசணி, இளநீர், ரோஸ்மில்க், வெள்ளரி போன்ற குளிர்ச்சியான பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

மதுரை மத்திய 2ம் பகுதி கழக செயலாளர் தளபதி ஆர்.மாரியப்பன் ஏற்பாட்டில் பெரியார் பஸ் நிலையம் பகுதியில் நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதனை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு பந்தலை திறந்து வைத்து பஸ் பயணிகள் ஆயிரக்கணக்கானோருக்கு நீர்,மோர் வழங்கினார். மத்திய 1ம் பகுதி அதிமுக சார்பில் பகுதி கழக செயலாளர் மா.ஜெயபால் ஏற்பாட்டில் ஆரப்பாளையம் பஸ்நிலையத்திலும் மத்திய 3ம் பகுதி சார்பில் சிம்மக்கல் பகுதியில் பகுதி கழக செயலாளர் பி.எஸ்.கண்ணன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த நீர்,மோர் பந்தல்களை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார்.

 மதுரை தெற்கு 1ம் பகுதி சார்பில் நெல்பேட்டையில் பகுதி கழக செயலாளர் ஷ.ராஜலிங்கம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த நீர்,மோர் பந்தலையும்  தெற்கு 2ம் பகுதி சார்பில் பகுதி கழக செயலாளர் வி.கே.எஸ்.மாரிச்சாமி ஏற்பாட்டில் மஹால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீர்,மோர் பந்தலையும் , தெற்கு 3ம் பகுதி சார்பில் பகுதி கழக செயலாளர் ஏ.கே.முத்திருளாண்டி ஏற்பாட்டில் திணமணி தியேட்டர் அருகே அமைக்கப்பட்டிருந்த நீர்,மோர் பந்தலையும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் சண்முகவள்ளி, பகுதி கழக துணைச்செயலாளர் கே.ராமநாதன், கவுன்சிலர் பி.குமார், விஜயராகவன், வட்ட செயலாளர்கள் ஆர்.போஸ், எம்.முக்கூரான், நா.பாண்டி, ஜி.மணிகண்டன், வி.மலைச்சாமி, எம்.ஜி.ஆர் நாகராஜன், எஸ்.பாலகிருஷ்ணன், பகுதி பேரவை செயலாளர் ஆர்.முனியாண்டி, பாக செயலாளர் ஜோசப் தனுஷ்லாஸ், பி.ராமமூர்த்தி,ஜி.சண்முக சுந்தரம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மதுரை மேற்கு 1ம் பகுதி சார்பில் பகுதி கழக செயலாளர் செ.பூமிபாலகன் ஏற்பாட்டில் ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த நீர்,மோர் பந்தலையும், மேற்கு 2ம் பகுதி சார்பில் பகுதி கழக செயலாளரும்,தெற்கு மண்டல தலைவருமான பெ.சாலைமுத்து ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த நீர்,மோர் பந்தலையும் மதுரை வடக்கு 1ம் பகுதி சார்பில் பகுதி கழக செயலாளர் அண்ணாநகர் முருகன் ஏற்பாட்டில் புதூர் பஸ்நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த நீர்,மோர் பந்தலையும் வடக்கு 2ம் பகுதி சார்பில் பகுதி கழக செயலாளரும், வடக்கு மண்டல தலைவருமான கே.ஜெயவேல் ஏற்பாட்டில் பீ.பீ.குளத்தில் அமைக்கப்பட்டிருந்த நீர்,மோர் பந்தலையும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்த வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர், இளநீர்,தர்ப்பூசணி,லெஸ்ஸி,சர்பத்,வெள்ளரிக்காய் ஆகிய குளிர்பானங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மேயர் ராஜன்செல்லப்பா,துணை மேயர் கு.திரவியம், எம்.ஜி.ஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் புதூர்துரைப்பாண்டி,சி.தங்கம், வில்லாபுரம் ஜெ.ராஜா, மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் வக்கீல் ரமேஷ்,மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி, மாணவரணி செயலாளர் ஏ.ராஜூவ்காந்தி, பாசறை செயலாளர் டி.வினோத்குமார்,கவுன்சிலர்கள் புதூர் அபுதாகீர்,கலாவதி தேவதாஸ்,முத்துமீனா சக்தி விநாயகர் பாண்டி, முருகேஸ்வரி துரைப்பாண்டியன், நூர்முகமது, ராஜலெட்சுமி மகாதேவன், இரா.லெட்சுமி, ஜெயலெட்சுமி, குமுதா, வீரணன், எஸ்.எஸ்.சரவணன், தொகுதி செயலாளர் எஸ்.முருகேசன்,திருப்பரங்குன்றம் ஒன்றிய பேரவை துணைத்தலைவர் நிலையூர் முருகன்,புதூர் இளங்கோ, புதூர் பாப்பா,எம்.கல்யாணி, ஆர்.ஜோதி.பி.புஷ்பா,சுகுணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து