முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவின் பால் விலை உயர்வால் ஏழை மக்களுக்கு பாதிப்பில்லை

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - ஆவின் பால் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிப்படையவில்லை என்று முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி இந்தப்பட்ஜெட்டில் மாநில அரசு புதிதாக வரிகளை போடவில்லையே தவிர பால்  விலையை உள்பட பல பொருட்களின் விலையை உயர்த்திவிட்டது. ஏழை எளிய  குழந்தைகள் பெண்கள் பயன்படுத்தும் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய்  அதிகரித்திருப்பது சரியல்ல. விலை ஏற்றத்தை வாபஸ் பெறக் கூடாதா?

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்:

ஆவின் பால்விலை உயர்வு விஷயத்தில் உறுப்பினர் இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளார். பால் விலையை உயர்த்தும்போது விலை உயர்ந்து விட்டது; மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒருபுறம் அதை எதிர்த்து குரல் எழுப்புகிறீர்கள், மறுபுறம் பால் கொள்முதல்விலை குறைவாக இருக்கிறது. அதை உயர்த்தி தாருங்கள் என்று கோரிக்கை விடுக்கிறீர்கள். கொள்முதல் விலையை கூட்டும்போது உற்பத்தி விலை அதிகரிக்குமா இல்லையா என்பதை உறுப்பினர்தான் சொல்லவேண்டும்.

பால் விலையை கூட்டாமல் எப்படி கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கமுடியும். அப்படி என்றால் கொள்முதல் விலையை கூட்டித்தரக்கூடாது என்று சொல்கிறீர்களா ? பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். தனியார் உற்பத்தி செய்கிற பாலின் விலை ஆவின் பாலின் விலையை விட அதிகமாகதான் உள்ளது.

கே.பாலபாரதி:

உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கொடுக்கவேண்டும என்றால் கட்டாயம் வழங்கவேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க விலையை உயர்த்தக் கூடாது என்கிறோம். இந்த இரண்டுக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப மாநில அரசு ஏன் மானியம் வழங்கக்கூடாது என்பதுதான் எங்களது கட்சியின் கேள்வி.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

கொள்முதல் விலையை மாநில அரசு உயர்த்தியதால் தான் ஒருநாளைக்கு 23லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் அளவு 30 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்தப்பட்டதில் எந்த தவறும் இல்லை. சென்னை போன்ற நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தான் ஆவின் பாலை நம்பியுள்ளனர். கிராமப்புறங்கள் மற்றும் மாநிலத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் ஆவின் பாலை பயன்படுத்துவதில்லை. தனியார் பால் நிறுவனங்களில் வாங்குகிறார்கள். எனவே பால்விலை உயர்வால் எந்த வகையிலும் எழை எளிய மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

பால்வளத்துறை அமைச்சர் பி.வி. ரமணா:

பால் விலை உயர்த்தப்பட்ட பின்னரும் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது. 27. 12.2014 அன்று 31லட்சத்து 28 ஆயிரத்தி 845 லிட்டர் பால் விற்றுள்ளது. இந்தாண்டு மார்ச். 27 ஆம் தேதி 31 லட்சத்து 31ஆயிரத்தி 381 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே பால்கொள்முதல் விலை மற்றும் நுகர்வோருக்கு விற்கும் விலை உயர்த்தப்பட்ட பிறகும் அதிகளவில் ஆவின் பால் விற்பனையாகி வருகிறது.
இவ்வாறு பாலபாரதிக்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து