முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கை எரிவாயுவின் விலை 9 சதவீதம் குறைப்பு

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் விலை முதல் முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 9 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ள இந்த விலைக் குறைப்பு, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதுகுறித்து மத்திய இயற்கை எரிவாயு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஒரு யூனிட் இயற்கை எரிவாயு வின் விலை, தற்போது 5.61 அமெரிக்க டாலராக உள்ளது. இது 9 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டு, 4.56 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த விலைக்குறைப்பு, ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதன் மூலம், மின் துறை உரத்துறை சார்ந்த நிறுவனங்கள் பயன்பெறும். சர்வதேச சந்தையை ஒட்டி இயற்கை எரிவாயுவின் விலை ஒவ்வொரு 6 மாதத்துக்கும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இப்போது விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விலைக்குறைப்பு குறித்து ஓஎன்ஜிசி தலைவர் தினேஷ் சராப் கூறுகையில், இதன்மூலம் நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், இயற்கை எரிவாயுவைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள முதலீடு குறையும் என்று கருத்து தெரிவித்தார். ஆசிய பசிபிக் பகுதியில் பிற நாடுகலை ஒப்பிடுகையில், இயற்கை எரிவாயுவின் விலை இந்தியாவில் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து