முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸ் நேரடி மானிய திட்டம் ஜூன் வரை கால அவகாசம்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - காஸ் நேரடி மானிய திட்டத்தில் இணைய வரும் ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 51 லட்சம் சமையல் எரிவாயு நுகர்வோர் உள்ளனர். இவர்களுக்கு இந்தியன் ஆயில், பாரத் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், ஏஜென்சிகள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சப்ளை செய்து வருகிறது.

காஸ் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடு மற்றும் போலி பதிவுகளை தடுக்கும் வகையில் மத்திய அரசு நேரடி மானிய திட்டத்தை அமல்படுத்தியது. கடந்த ஜனவரி முதல் நாடு முழுவதும் இத்திட்டம் அதிரடியாக அமலுக்கு வந்தது. திட்டத்தில் இணைய காஸ் நுகர்வோர்களுக்கு வங்கி கணக்கு கட்டாயமாக்கப்பட்டது. காஸ் நேரடி மானியத்தில் இணைய முதற்கட்டமாக 3 மாதம் காலம் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை நுகர்வோர்களுக்கு முதல் கட்ட கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதுவரை தமிழகம் முழுவதும் 86 சதவீதம் பேர் நேரடி மானியத்தில் இணைந்துள்ளனர். ஆதாவது 1கோடியே 30 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

அவர்களுக்கான மானியத் தொகை வங்கி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் தமிழகத்தில் 21 லட்சம் பேர் நேரடி மானிய திட்டத்தில் இணையவில்லை. அவர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாவது, ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 3மாதம் கால அவகாசம் வழங்கப்படும். இந்த 3 மாதத்தில் அவர்கள் சந்தை விலையில் சிலிண்டர் வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் மானியம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அளிக்கப்படும். இரண்டாவது கால அவகாசத்திலும் இணையாத காஸ் நுகர்வோர்கள், ஜூலை 1ம் தேதி முதல் சந்தை விலையில் தான் சிலிண்டர்களை வாங்க வேண்டும்.

இன்னும் 21 லட்சம் பேர் விண்ணப்பிக்காமல் உள்ளனர். அவர்கள் கூடுதல் கால அவகாசத்திலும் விண்ணப்பிக்கவில்லை என்றால் அந்த இணைப்புகள் போலியானவை என்று தெரியவரும். அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டால் அந்த இணைப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என ஐஓசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து