முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திர கிரகண நேரத்தில் காளஹஸ்தி கோயில் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

காளஹஸ்தி - சந்திர கிரகண நேரத்தில் அனைத்து கோயில்களும் நடை அடைக்கப்பட்டிருந்த நிலையில் காளஹஸ்தி சிவன் கோயில் நடை திறக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு ராகு, கேது சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சந்திரகிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட நாட்டின் பெரும்பாலான கோவில்கள் நடை அடைக்கப்பட்டிருந்தன.

சந்திர கிரகணம் முடிந்துபரிகார பூஜைகள் செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் காளஹஸ்தி சிவன் கோயில் சந்திரகிரகண நேரத்திலும் நடை திறக்கப்பட்டு கிரகண நேரமான பகல் 3.45 முதல் இரவு 7.15 மணி வரை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. சந்திரகிரகணம் காரணமாக அனைத்து கோயில்களிலும் நடை அடைக்கப்பட்ட நிலையில் நடை அடைக்கப்படாத இந்த சிவன் கோயிலில் தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

சந்திரகிரகண சமயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த கோவிலில் காளத்தீஸ்வரர் ராகுவாகவும், ஞானபூங்கோதை தாயார் கேதுவாகவும் பக்தர்களுக்கு அருள் புரிவதால் இங்கு கிரகண சமயத்தில் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். அதனால் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து