முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11-வது கட்ட அதிமுக அமைப்புத்தேர்தல்: அமைச்சர்கள் மனுத்தாக்கல்

புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - 25 மாவட்டங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய 11-வது கட்ட தேர்தல் நேற்று தொடங்கியது.இதில் மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.  .

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான  ஜெயலலிதா, ஏற்கெனவே வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அதிமுகவின்  அனைத்து நிலைகளுக்குமான அமைப்புத் தேர்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், 11-ஆவது கட்டமாக நேற்று  முதல் வரும் 17-ம்தேதி வரை 25 மாவட்டங்களுக்கும், 12-ஆவது கட்டமாக, வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 25 மாவட்டங்களுக்கும் உட்பட்ட மாவட்டஅதிமுக  நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை நடத்திடும் வகையில், மாவட்டத் தேர்தல் ஆணையாளர்களை நியமித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

அதிமுக அமைப்புத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறும் வகையில் மண்டலத் தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டத் தேர்தல் ஆணையாளர்களுக்கு அதிமுக  தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருந்தார். இதன்படி, நேற்று முதல் வரும் 17-ம் தேதி வரை 25 மாவட்டங்களில் 11-வது கட்ட தேர்தல்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பதவிக்கான வேட்புமனுவை தேர்தல் ஆணையரிடம் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் தாக்கல் செய்தார். மேலும், பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட அவைத் தலைவர் உள்ளிட்ட 13 பொறுப்புகளுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஈரோடு மாநகர் மாவட்டநிர்வாகிகளுக்கான அமைப்புத் தேர்தல் உள்ளிட்ட பதவிகளுக்கான மனு தாக்கல் நடைபெற்றது. இதில், திரளான கழகத்தினர் ஆர்வத்துடன் மனுத் தாக்கல் செய்தனர். நெல்லை மாநகர் மாவட்டஅ.திமு.க. அமைப்புத் தேர்தலில் போட்டியிடும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வேட்புமனுக்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்டவற்றுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கரூர் மாவட்ட அவைத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடும் கழக நிர்வாகிகள், வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
நாகை மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில், ஏராளமானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். சிவகங்கை மாவட்டச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலில், கழக நிர்வாகிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.. கோவை புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து