முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை இந்தியன்சை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் ஹாட்ரிக் வெற்றி

புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

அகமதாபாத் - 8வது ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்தது.  நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்று ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியுள்ளது. 8-வது ஐ.பி.எல். போட்டியின் 8-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியில் மூன்று மற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. ஹர்பஜன் சிங்குக்கு பதிலாக லெக் ஸ்பின்னர் ஸ்ரேயாஸ் கோபால் அணியில் இடம் பிடித்தார். பார்திவ் படேல் மற்றும் உன்மூகத் சந்த் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் பார்திவ் படேல் களமிறங்கினார்கள். அதிரடியாக விளையாடிய பின்ச் 10 ரன் எடுத்திருந்த போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாட முடியாமல் டிக்லெர் செய்யப்பட்டு வெளியேறினார். பார்திவ் படேல் 16 ரன் எடுத்திருந்த நிலையில் குல்கர்னி பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய உன்மூகத் சந்த் 16 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இந்த முறை நடுகள வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா டக் அவுடாகி அனைவரையும் ஏமாற்றினார்.

இதனால் 10 ஒவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் என தடுமாறிக் கொண்டிருந்தது மும்பை அணி. அப்போது ஜோடி சேர்ந்த பொல்லார்டு- ஆண்டர்சன் இருவரும் முதலில் மெதுவாக ஆடி ரன் எடுத்தனர். பின்னர் பொல்லார்டு தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். மறுமுனையில் இருந்த ஆண்டர்சனும் தனது பங்குக்கு பவுண்டரிகளை விரட்டியப்படி இருந்தார்.  ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் டிம் சவுதி 4 ஒவரில் 46 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். அந்த அணியில் குல்கர்னி மட்டும் சிறப்பாக பந்து வீசி 3 ஒவரில் 15 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 1 விக்கெட்டை விழ்த்தினார்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரகானேவும் சஞ்சு சாம்ஸனும் களமிறங்கினர். வேகமாக ரன் குவிக்க தடுமாறிய சாம்சன் 16 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வினய் குமார் பந்தி வீச்சில் அவுட் ஆனார். இதன் பிறகு ரகானேவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஸ்மித். 39 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த ரகானே, ஸ்ரேயாஸ் கோபால் பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சித்து கேட்சானார். கடந்த இரு போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய தீபக் ஹூடா வந்த வேகத்தில் 2 சிக்சர்களை பறக்கவிட்ட நிலையில் மலிங்கா பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 165 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித் 53 பந்துகளில் 79 ரன்களைக் குவித்தார். அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து