முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சரத்குமார் ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழர்கள் ஆந்திர போலீசார் குருவி சுடுவதை போல சுட்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு ஆந்திர அமைச்சர் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல பேசியிருக்கிறார். இது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழரகள், ஆந்திரம்,கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழ்கிறார்கள். அவர் அம்மாதிரி பேசியிருப்பது தேசிய ஒருமைப்பாட்டை பாதிக்கும். பிரதமர் மோடி, தனது வெளிநாட்டு பயணத்தின்போதே கண்டித்திருக்க வேண்டும். நாடு திரும்பியவுடன் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.
ஆந்திராவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். எல்லா கட்சிகளும் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றன. சமக சார்பில் நாங்கள் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோருகிறோம். மேலும் ஆந்திராவில் கொல்லப்பட்ட ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் ரூ 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமக எம்.எல்.ஏ நாராயணன், சமக பொதுசெயலாளர் கரு,நாகராஜன், மாவட்ட செயலாளர் சேவியர் உள்ளிட்ட்வர்கள் கலந்து கொண்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து