முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாள முன்னாள் பிரதமர் காலமானார் மோடி இரங்கல்

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

புது டெல்லி, ஏப்.18-
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சூர்யபகதூர் தாபா, டெல்லியருகே குர்கானியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் காலமானார்.
அந்த மருத்துவமனையில் கடந்த 29ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு குடல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தாபாவுக்கு கடந்த 10ம் தேதி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை இரவு 10.44 மணிக்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து அவரது உடலை வியாழக்கிழமை காலையில் உறவினர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். தாபாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தாபாவின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. 1999 ஆண்டுக்கு முன்பு 3 முறை பிரதமர் பதவி வகித்த தாபா அதற்கு பிறகு ராஷ்ட்ரீய பிரஜாந்திர கட்சி என்ற பெயரில் புது கட்சியை தொடங்கினார். இதையடுத்து மீண்டும் இரு முறை பிரதமராக பதவி வகித்த அவர் 2005ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து