முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜக பெண் எம்.பி. யின் நடனம்: பார்வையாளர்கள் வீசியெறிந்த ரூ. 3 கோடி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

பாஜக எம்.பி. பூனம்பென் நடனம்

குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக எம்.பி. பூனம்பென் நடனம் ஆடியதற்கு பார்வையாளர்கள் ரூ. 3 கோடி நோட்டுகளை காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள வெராவலில் பகவத் கதா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஜாம்நகர் பகுதியில் இருந்து பாஜக சார்பில் எம்.பி.யான பூனம்பென் கலந்து கொண்டார். பகவத் கதா நிகழ்ச்சியில் பலருடன் சேர்ந்து நடனம் ஆடினார்.

அவர் நடனம் ஆடத் துவங்கியதை பார்த்ததும் பார்வையாளர்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை அவரை நோக்கி பறக்க விட்டனர். 30 வினாடிகளில் ரூ.3 கோடி நோட்டுகள் பறக்க விடப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த பிறகும் அந்த இடத்தில் பணக் குவியலாக இருந்தது.

41 வயதாகும் பூனம்பென்னின் தந்தை 1972ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 4 முறை சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து