முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20வது தலைமைத் தேர்தல் கமிஷனராக ஜெய்தி பதவியேற்றார்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏப் 20:

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஹரிசங்கர் பிரம்மா ஓய்வு பெற்றார். இதையடுத்து இந்தியாவின் 20வது தலைமைத் தேர்தல் ஆணையராக சையது நசீம் அகமது ஜெய்தி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அப்போது கூறிய அவர், தேர்தல் கமிஷன் என்பது இந்திய அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த அமைப்பு என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

மேலும் தான் தெளிவோடு செயல்படப் போவதாகவும், புதிய யோசனைகளை கையாண்டு தேர்தல் நடைமுறைகளை மிக சிறந்ததாக ஆக்கும் வகையில் பாடுபடப் போவதாகவும் தெரிவித்தார் ஜெய்தி.

தேர்தல் நடைமுறைகள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறிய அவர், இந்த பதவியை ஏற்றதன் மூலம் தாம் பெருமைப்படுவதாக குறிப்பிட்டார்.

அஸ்ஸாமைச் சேர்ந்த பிரம்மா. 1975ம் ஆந்திர மாநில பேட்ச்சைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 65 வயதாகும் அவர் 3 கடந்த ஜனவரி மாதம் 19வது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.ஜே.எம். லிங்டோவுக்குப் பிறகு வட கிழக்கு மாநிலத்தை் சேர்ந்த தலைமைத் தேர்தல் ஆணையராக பிரம்மா திகழ்ந்தார்.

பிரம்மாவின் தலைமையில் டெல்லி சட்டசபைத் தேர்தலை தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தியது. தற்போது புதிய ஆணையராக நசீம் ஜெய்தி வந்துள்ளார். 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில், இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவி காலியாக உள்ளது நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து