முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் ராகுல் காந்தி ஆவேச பேச்சு

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

மோடி அரசு விவசாயிகளை புறக்கணிக்கிறது. தொழிலாளர்களை பற்றி கவலைப்படுவதே இல்லை. அவர்களை பார்ப்பதும் இல்லை என்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். இந்த அரசு அனைத்து வகையிலும் தோற்று விட்டது என்றும் அவர் பேசினார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நேற்று ஆரம்பமானது. அப்போது கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிலம் கையக மசோதா தொடர்பான அவசர சட்டம் லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. 16வது லோக்சபை கூட்டத்தில் ராகுல் காந்தி நேற்று முதல் முறையாக பேசினார்.

அப்போது அவர் மோடி அரசை சற்று கடுமையாகவே தாக்கி பேசினார். இந்த ஆட்சியில் வேளாண்மை வளர்ச்சி என்பது ஒரு சதவீதமாக உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். விவசாயிகளை கவனிப்பதாக பிரதமர் சொல்கிறார். அவர்கள்தான் இந்த நாட்டின் அஸ்திவாரம். அவர்கள் இல்லாமல் இந்த நாட்டை எப்படி வலுப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார் ராகுல். பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதையும் ராகுல் சுட்டிக் காட்டினார்.

அவற்றை எல்லாம் பிரதமர் நேரில் சென்று பார்க்க வேண்டும். எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பிரதமர் கண்டறிய வேண்டும் என்றும் ராகுல் ஒரு கட்டத்தில் யோசனை தெரிவித்தார். இந்த அரசு விவசாயிகளை புறக்கணிக்கிறது. தொழிலாளர்கள் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களை பார்ப்பதும் இல்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து