முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமனில்,ஒரு மாத காலகட்டத்தில் 551 அப்பாவி மக்கள் பலி :ஐ.நா தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

சானா: ஏமனில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதியில் இருந்து ஏப்ரல் 22ம் தேதிவரை 551 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் 115 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.1,185பேர் காயம் அடைந்துள்ளனர் என ஐ.நா.மனித உரிமை  து◌ாதர் தெரிவித்தார்.
ஏமன் நாட்டில் ஹவுதிஸ் என அறியப்படும் ஷியா புரட்சிக்காரர்களுக்கும் அரசு படையினருக்கும் இடையே  போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் வளைகுடா நாடுகளான எகிப்து,சூடான்,நாடுகளின் படைகள் போரிட்டு வருகின்றன.

ஏமனில் பெரும்பாலான இடங்களை ஹவுதிஸ் புரட்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி முதல் வான் வழித்தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த வான் வழி தாக்குதல் நடந்த ஒரு மாத கால கட்டத்தில் 551 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏமன் தலைநகரம் சானா மற்றும் இதர 4நகரங்களில் ஏற்பட்ட மக்கள் பலி எண்ணிக் கையை ஆய்வு செய்த ஐநா அமைப்பு அப்பாவி மக்கள் பலி எண்ணிக் கையை கூறியுள்ளது.

பொது மக்கள் பலியாகமல் தடுக்க முன்எச்சரிக் கை நடவடிக் கைகளை எடுக்க கூட்டுப்படைகள் தவறியுள்ளன என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உயிரை காப்பாற்றிகொள்ள 1லட்சத்து 50ஆயிரம் ஏமன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அரபு நாடுகளில் மிக ஏழ்மையான நாடாக உள்ள ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் குறித்து உலக தலைவர்கள் எந்த வித எச்சரிக் கையும் தரவில்லை. இதனால் அந்த நாட்டில் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

ஏமனில் போர் நடத்தி வரும் ஹவுதிஸ் புரட்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் சப்ளை செய்வதாக சன்னி பிரிவைச்சேர்ந்த அரபு நாடுகளும் மேற்கத்திய ஆதரவு நாடுகளும் தெரிவித்துள்ளன. ஏமன் புரட்சியாளர்களுக்கு நாங்கள் ஆயுதம் சப்ளை செய்ய வில்லை என ஈரான் மறுத்துள்ளது.அதேப்போன்று புரட்சியாளர்களும் தெரிவித்து இருக்கிறார்கள். ஷியா பிரிவினருக்கு அரசியல் மற்றும் மனித நேய உதவி மட்டும் அளிப்பதாக ஈரான் தெரிவித்து இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து