முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமலின் உத்தமவில்லன் வெளியானது ரசிகர்கள் மகிழ்ச்சி

சனிக்கிழமை, 2 மே 2015      சினிமா
Image Unavailable

kamal

சென்னை: கமலின் உத்தமவில்லன்  படம் நேற்று    பகல் ரிலீசானது. இப்படம்  நேற்று முன்தினம்  ரிலீசாவதாக இருந்தது. தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் திரையிட ஒதுக்கி இருந்தனர். டிக்கெட் முன்பதிவும் செய்யப்பட்டன. தியேட்டர்களில்  கமல் கட்-அவுட்கள் கொடி தோரணங்களை ரசிகர்கள் அமைத்து  இருந்தனர். படம் பார்க்க அதிகாலையிலேயே தியேட்டர்களிலும்  திரண்டார்கள். ஆனால் திட்டமிட்டபடி உத்தம வில்லன் நேற்று ரிலீசாக வில்லை. காலை காட்சி, மதிய காட்சி மற்றும் இரவு காட்சிகள் ரத்து செய்யப் பட்டன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம்  அடைந்தார்கள். ரகளை மற்றும் மறியலில் ஈடுபட்டார்கள்.

உத்தமவில்லன்  படத்துக்காக தயாரிப்பாளர் கடன் வாங்கி இருந்ததாகவும் அந்த கடனை திருப்பி செலுத்தாததால் படத்தை ரிலீஸ் செய்ய  தடை விதித்த தாகவும் கூறப்பட்டது.  இந்த விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.  பிரச்சினைக்கு தீர்வு காண திரைப்பட சங்கத்தினர் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர்.  நடிகர் சங்க  தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, துணைத் தலைவர்கள் தேனப்பன், கதிரேசன், செயலாளர்கள் டி.சிவா, பொருளாளர் டி.ஜி.தியாகராஜன், டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன்,  பட அதிபர்  ஞானவேல்ராஜா  மற்றும் அன்பு செழியன், அருள்பதி,  திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நேற்று காலை  வரை  விடிய விடிய  பேச்சு வார்த்தை நடந்தது.

இதில்  காரசார விவாதம்  நடந்தது.  கடன்  கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று பிடிவாதமாக கூறினார்கள். அவர்களை சமரசப் படுத்தும் முயற்சி நடந்தது.  காலை 3 மணிக்கு   கூட்டம் முடிந்தது. பின்னர்  கலைப்புலி தாணு கூறும் போது பேச்சு வார்த்தையில்  சுமூக தீர்வு ஏற்பட்டு உள்ளது  என்றும் நேற்று  படம்  ரிலீசாகும் என்றும் தெரிவித்தார். ரசிகர்கள் நேற்று காலை படம் பார்க்க  தியேட்டர் களில் குவிந்தார்கள்.  ஆனால் நேற்று  காலை காட்சியும் ரத்து  செய்யப்பட்டது. ஆனால் பகலில் ரிலீசானது.  இதுகுறித்து  நடிகர் சங்க தலைவர்  சரத்குமார் கூறும் போது தொடர்ந்து 24 மணி நேரம் பேச்சு வாத்தை நடத்தி தீர்வு காணப்பட்டுள்ளது. பகல் 1.30 மணி காட்சியில் இருந்து படம் தொடர்ந்து  திரையிடப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து