முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      உலகம்
Image Unavailable

டோக்கியோ, ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி தாக்கியது. அதனால் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஜப்பானில் நேற்று அதிகாலை 1.50 மணிக்கு இந்திய நேரப்படி நேற்று மாலை 4.50 மணிக்கு இஷூ தீவு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தெற்கு ஜப்பானில் உள்ள தீவுகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர். அங்கு 5.9 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் இஷூ தீவுகள், ஹஜிஜோஷிமா உள்ளிட்ட தீவுகளில் சுனாமி பேரலை தாக்கியது. வழக்கத்தை விட ஒரு மீட்டர் உயரத்திற்கு அலை எழும்பியது. அதை தொடர்ந்து இஷூ தீவுகள், தெற்கு டோக்கியோ, ஒசாசவரா ஆர்சிபெலாகோ பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அங்கு கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். நிலநடுக்கம் மற்றும் காயம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து