எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐதராபாத் - வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில், கோஹ்லியின் அதிரடியில் ஐதராபாத்தை அபாரமாக வீழ்த்தியது பெங்களூர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் - ஐதராபாத்தில் இடையிலான 8 மணிக்கு தொடங்க இருந்த ஆட்டம் மழை காரணமாக, 11 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. எனவே ஆட்டம், 10.40 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க ஆட்டகாரர்களாக வார்னரும், தவானும் களமிறங்கினார்கள்.
தவான் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து களமிறங்கிய மோசஸ் ஹென்ரிக்ஸ் வார்னருடன் சேர்ந்து பெங்களூர் பந்து வீச்சை சிதறடித்தார்கள். அந்த அணி 11 ஒவரில் 135 ரன்கள் குவித்தது. ஹென்ரிக்ஸ் 57 ரன்களும், வார்னர் 52 ரன்களும் எடுத்தனர். ஆனால் மீண்டும் மழை குறுக்கிட்டதால், ஒவர்கள் குறைக்கபட்டு, பெங்களூர் அணி 6 ஒவரில் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது. கெயில் 10 பந்துகளில் 35 எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் டக் அவுட் ஆனதால் ஆட்டத்தில் உச்சகட்ட டென்ஷன் ஏறியது. வேறு ஒரு பேட்ஸ்மேனும் சரியாக ஆடாத நிலையில் கோஹ்லி மட்டும் தொடர்ந்து போராடியபடியே இருந்தார். கடைசி இரு பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அந்த ஒவரின் 5வது பந்தை தூக்கி அடிதார்.
சிக்ஸ் போகும் என்று எதிர்பார்த்த நிலையில் எல்லை கோட்டு அருகே இருந்த வார்னர் அதை கேட்ச் பிடித்தார். ஆனால் கேட்ச் பிடித்த மகிழ்ச்சியில் பவுண்டரி எல்லைக்கோட்டை மிதித்துவிட்டார். இதனால் அது சிக்ஸராக அறிவிக்கப்பட்டது. பெங்களூர் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 44 ரன்கள் எடுத்த கோஹ்லி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |