Idhayam Matrimony

6,100 கிலோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் முதல்முறையாக இஸ்ரோ புதிய சாதனை

புதன்கிழமை, 24 டிசம்பர் 2025      இந்தியா
ISRO-2025-12-24

ஸ்ரீஹரிகோட்டா, அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான 6,100 கிலோ எடையுள்ள புளூபேர்ட்- 6 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி முதல்முறையாக இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உள்நாடு, வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான புளூபேர்ட்- 6 செயற்கைக்கோளை இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட் போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும். இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும்.

புளூபேர்ட்- 6 செயற்கைக்கோள் 6,100 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

இதன் மூலம் 6,100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முதலாக வெற்றிகரமாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இதுபோன்ற அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முன்னதாக பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவின. தற்போது, இவ்வளவு எடைகொண்ட செயற்கைக்கோளை முதல் முறையாக இஸ்ரோ ஏவியுள்ளது.

அதனைத்தொடர்ந்து, தரையில் இருந்து புறப்பட்டு 15 நிமிஷம் 52 வது வினாடியில், 520 கி.மீ உயரத்தில், புவியின் தாழ் வட்ட சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறும்போது, “இந்த ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும். இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் இது. இந்தப் பணியின் மூலம், இந்தியா இப்போது 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பெருமையையும் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து