Idhayam Matrimony

தமிழகத்தை பாசிச சக்திகளால் ஒன்றுமே செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 24 டிசம்பர் 2025      தமிழகம்
Stalin 2022 12 29

சென்னை, ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை, பெரம்பூர், டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற, “கிறிஸ்துமஸ் பெருவிழா”-வில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கிறிஸ்துமஸ் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய நாள். அன்பை பரிமாறிக்கொள்ளும் நாள். அப்படிப்பட்ட இந்த திருநாள் கொண்டாட்டத்தில் 3 ஆயிரத்து 250 குடும்பங்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கியிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். உங்களின் வாழ்க்கையில் ஒளி நிலைபெற வேண்டும் என்று பார்த்துப் பார்த்து திட்டங்களை செய்துகொண்டு இருக்கிறோம்.

திருநெல்வேலியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் 4 அறிவிப்புகளை வெளியிட்டேன். அதே போன்று இந்த மேடையில் இனிகோ வைத்த கோரிக்கைக்கான அறிவிப்பை இப்போதே வெளியிட நான் விரும்புகிறேன். அதாவது, 2019 முதல் 2024 வரை செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள் 2019-இன் படி உள்ள மதச்சார்பான கட்டிடங்களுக்கு மாவட்ட கலெக்டரின் தடையில்லா சான்றை வலியுறுத்தாமல் திட்ட அனுமதி வழங்கப்படும். இந்த காலத்தில் திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பித்திருக்கும் மதச்சார்பான கட்டிடங்களுக்கும் இது பொருந்தும்.

நாட்டில், அன்புவழி நடக்கும் சமத்துவத்தை விரும்பும் சக மனிதர்களை சகோதர - சகோதரிகளாக நினைக்கும் மக்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். ஜனநாயகத்தில் இந்த வலிமைமிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து, மக்களும் ஆதரவாக இருக்கும்போது, எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்குத் துணையாக தி.மு.க.வும் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும் உறுதியாக இருக்கும். அதேபோல், என்றைக்கும் நீங்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு, மீண்டும் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து, விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து