முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி லட்டு டோக்கன் வழங்குவதில் மோசடி: அதிகாரிகள் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி: பக்தர்களுக்கு லட்டு டோக்கன் வழங்குவதில் மோசடி நடை பெற்றதாக தகவல் வெளியான தையடுத்து, ஊழியர்களிடம் தேவஸ் தான கண்காணிப்பு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் பெறுவதற்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அலிபிரி மலைவழிப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாத டோக்கன்கள் வழங்கப்படுகிறது. சர்வ தரிசன திட்டத்தின் கீழ் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ரூ.20க்கு 2 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. கூடுதல் லட்டு பிரசாதம் தேவைப்படும் பக்தர்களுக்கு ரூ.100-க்கு 4 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் லட்டு டோக்கன் வழங்கும் மையங்களில் போலி டோக்கன்கள் புழங்குவதாக வந்த புகார்களின் பேரில், கடந்த சில நாட்களாக தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், லட்டு வழங்கும் மையத்தில் ஏராளமான போலி டோக்கன்கள் இருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதன் மூலம் லட்சக்கணக்கில் தேவஸ்தானத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தான அச்சக ஊழியர்களிடமும், லட்டு டோக்கன் வழங்கும் ஊழியர்களிடமும் தேவஸ்தான அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து