முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10–ம் வகுப்பு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: 104 சேவை எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

புதன்கிழமை, 20 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முறை இன்று வெளியாகிறது. இதையொட்டி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப் படுகிறது.

தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் 104 மருத்துவ சேவை வழியாக முற்றிலும் இலவச ‘கவுன்சிலிங்’ அளிக்கப்படுகிறது.

இந்த உளவியல் ஆலோசனை மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் வழங்கப்படுகிறது. தேர்வு முடிவுகளை அச்சமின்றி எதிர்கொள்வது, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றாலும், தோல்வி அடைந்தாலும் கவலைபடத் தேவையில்லை.

மாணவர்கள் சோர்வு ஏற்படாமல் மீண்டும் எப்படி வெற்றி பெறுவது, தவறான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது போன்ற ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் உளவியல் மருத்துவ குழு அளிக்கிறது.

104 சேவை எண்ணில் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து தொடர்பு கொண்டாலும் அவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்கப்படும். நேற்று முன்தினம் முதல் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

உளவியல் ஆலோசனை குறித்து 104 சேவை ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் கூறியதாவது:–

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பதட்டம் இல்லாமல் எதிர்கொள்ள இந்த உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது.

இந்த சூழலில் 50 உளவியல் ஆலோசனை மருத்துவர்கள் இடம் பெற்றுள்ளனர். 24 மணி நேரமும் இந்த சேவை அளிக்கப்படும். மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இது உதவியாக இருக்கும். இந்த வாய்ப்பை பெற்றோர்கள், மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த பிளஸ்-2 தேர்வின் போது 6000 அழைப்புகள் உளவியல் ஆலோசனைக்காக வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து