முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தரவரிசையில் மீண்டும் சாய்னா நெவால் முதலிடம்

வியாழக்கிழமை, 21 மே 2015      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் - இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் உலக தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த மாதத்தின் தொடக்கத்தில் முதன் முதலாக நம்பர் 1 இடத்தைப் பிடித்து சாதனை புரிந்த சாய்னா நெவால், அதன் பிறகு அந்த இடத்தை இழந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் மே 26-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார் சாய்னா.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் கடந்த முறை சாம்பியனான சாய்னா இந்த முறை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க இந்த முதலிடம் உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு வீராங்கனை பி.வி.சிந்து, 12-வது இடத்தில் உள்ளார். ஆடவர் பிரிவில் கே.ஸ்ரீகாந்த் 4-வது இடத்தை தக்கவைத்துள்ளார். காஷ்யப் தனது 13-வது இடத்தை தக்கவைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து