முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணிதவியல் மேதை ஜான் நாஷ் விபத்தில் மரணம்

திங்கட்கிழமை, 25 மே 2015      உலகம்
Image Unavailable

நியூஜெர்ஸி: பொருளாதார அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற கணிதவியல் மேதை ஜான் நேஷ் கார் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.  அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் டர்ன்பைக் என்ற இடத்தில் நடந்த கார் விபத்தில் அவரும் அவரது மனைவி அலிசியாவும் (82) உயிரிழந்தனர்.

ஜான் நாஷ் 1928-ம் ஆண்டு மேற்கு வர்ஜீனியா மாகாணத்தில் பிறந்தார். நாஷ் ஈகுவிலிபிரியம் அதாவது கேம் தியரி என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் கணித சூத்திரத்தில் ஜான் நேஷ் மேற்கொண்ட ஆய்வுப் பணி பல தலைமுறைகளைச் சேர்ந்த கணிதவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக பயன்படுகிறது. 1994 ஆம் ஆண்டு அவருக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பேரனாய்ட் ஸ்கிஷோஃப்ரெனியா என்ற நோயால் பெரும் பாதிப்புக்குள்ளாகி மீண்ட ஜான் நாஷ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஏ பியூட்டிஃபுல் மைண்ட் என்ற திரைப்படம், ஆஸ்கர் விருது வென்றதுடன் உலகப் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து