முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆய்வக உதவியாளர் பணியிட தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

திங்கட்கிழமை, 25 மே 2015      தமிழகம்

சென்னை - ஆய்வக உதவியாளர் பணியிட தேர்வுக்காக விண்ணப்பத்தாரா்களுக்கு இன்று முதல்ஹால் டிக்கெட்டுகளை பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. வரும் 31.ந்தேதி  ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான  தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக் கூடநுழைவுச் சீட்டினை 25.ந்தேதி  பிற்பகல் முதல்  இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம்செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் பின்வருமாறு: 1. ஆய்வக உதவியாளர் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் 25.ந்தேதி  பிற்பகல்முதல் தமது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை www. tndge.in என்ற இணையதளமுகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரிக்குள் டogin செய்தவுடன்Lab Assistant Screen Test Exam Hall Ticket DownLoad (ஆய்வகஉதவியாளர் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்) என்பதை க்ளிக் செய்துதோன்றும் திரையில் தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்திலுள்ள பதிவெண் மற்றும்பிறந்த தேதி ஆகிய விவரங்களை தட்டச்சு செய்து download என்பதை க்ளிக்செய்தால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் ஆகும். அதனை தேர்வர்கள்அப்படியே பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். மேற்கண்ட முறையில் தேர்வர்கள் தமது ஆய்வக உதவியாளருக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து