முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் கடும் வெயிலுக்கு 2000க்கும் மேற்பட்டோர் பலி

சனிக்கிழமை, 30 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் கத்திரி வெயில் முடிவடைந்த நிலையில், வடமாநிலங்களில் தொடர்ந்து வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் அங்கு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 1900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஓடிசாவில் சுமார் 50 பேர் வெயிலுக்கு பலியாகி விட்டனர். 

ஜார்க்கண்ட், டெல்லி உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன் தினம் கத்திரி வெயில் முடிவடைந்த நிலையில், வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம், பலமாவ் பகுதியில் அதிகபட்சமாக 46 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியிருந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

பகல் நேரத்தில் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குளேயே முடங்கி கிடந்தனர். எனினும் வெயில் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் முடிவடைந்த நிலையில், ஒரிரு தினங்கலில் தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால் கேரளாவின் பெரும்பாலான இடங்களில் மழை, பெய்யும் எனவும், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து