முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் உலகில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த கோஹ்லி விருப்பம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

டெல்லி -   இன்னும் 5 வருஷத்துக்கு இந்திய அணி கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி விருப்பம் தெரிவித்துள்ளார்.டோணி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டதால் புதிய கேப்டனாகியுள்ளார் கோஹ்லி.

இந்த நிலையில் கோஹ்லி தனது ஐந்தாண்டுத் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது அடுத்த ஐந்து வருடத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்திய அணியினருடன் நட்புறவை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளேன். அணிக்குள் அனைவருக்கும் இடையே நல்ல தோழமை இருக்க வேண்டியது அவசியம். நம்மிடம் நிறைய திறமைகள் உள்ளன. நம்மால் நிச்சயம் எதையும் சாதிக்க முடியும். அந்தத் திறமைகளை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றியும், சாதனையும் அடங்கியுள்ளது.

குறைந்தது அடுத்த 5 வருடத்திற்கு நாம் ஆதிக்கம் செலுத்த வேண்டும். நம்மால் நிச்சயம் அது முடியும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் இதை சாதிக்க முடியும். வீரர்களுக்கிடையே நல்லுறவு நீடிப்பது அவசியம், வலுவான உறவாக அது அமைய வேண்டும். இதை நான் செய்யப் போகிறேன். அருமையான அணியாக அதைக் கட்டெழுப்பப் போகிறேன்.

வருடத்திற்கு 250 முதல் 280 நாட்கள் வரை அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். எனவே ஒரு குடும்பம் போல அனைவரும் இணைந்து, இயைந்து செயல்பட வேண்டியது அவசியம். தற்போது உள்ள அணி அருமையான அணி, பலமான அணி, ஒற்றுமையான அணி. அனைவரும் இணைந்து ஆட விருநம்புகிறோம். தனித் தனியாக சுயநலமாக விளையாட இங்கு யாரும் விரும்பவில்லை. இதுதான் எனது ஆசையும் கூட. வீரர்களை நான் சுதந்திரமாக ஆட விரும்புகிறேன்.

அவர்களுக்குள் எந்தவிதமான பயமும், அச்சமும், சந்தேகமும் இல்லாத வகையில் அவர்கள் சுதந்திரமாக ஆட வேண்டும். அணியில் இடம் இருக்குமா, இருக்காதா என்ற எண்ணமே அவர்களுக்கு வரக் கூடாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பெஸ்ட் டீம் என்றால் அது இந்தியா என்றுதான் இருக்க வேண்டும். அதுதான் எனது ஆசையும், லட்சியமும் ஆகும். சில நேரம் அந்த இலக்கை நோக்கி நாம் போயிருக்கிறோம். ஆனால் அடுத்த 5 வருடத்தில் இது நிச்சயம் நிகழும் என்றார் கோஹ்லி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து