முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - வங்காளதேசம் முதல் ஒரு நாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெறுகிறது

புதன்கிழமை, 17 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

டாக்கா - இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் மழையால் டிரா ஆனது. இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் டாக்காவில் இன்று நடக்கிறது. டோணி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் கடைசியாக உலககோப்பை கால் இறுதியில் மோதின. இதில் இந்தியா 109 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் நடுவர்கள் இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக வங்காளதேசம் குற்றம் சுமத்த்தியது.

அந்த சர்ச்சைக்கு பிறகு அணிகளும் தற்போது சந்திக்கின்றன. டெஸ்ட் போட்டியில் தவான், ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் டோணி, வீராட்கோலி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அம்பதி நாயுடு, அஸ்வின் போன்ற சிறந்த வீரர்களும் அணியில் உள்ளனர். மொர்தாசா தலைமையிலான வங்காளதேச அணி சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தும் நோக்கில் உள்ளது. துணை கேப்டன் சகீப் அல் ஹசன், முஸ்பிகுர் ரகீம், மொமினுல் ஹக், தமிம் இக்பால், நாசில் உசேன், ரூபெல் உசேன், போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

இன்று ஆட்டம் பகல் இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் விவரம்: இந்தியா: டோணி (கேப்டன்), தவான், ரகானே, ரோகித் சர்மா, வீராட் கோலி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், உமேஷ் யாதவ், மொகித்சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, அம்பதி ராயுடு, புவனேஸ்வர்குமார், குல்கர்னி. வங்காளதேசம்: மொர்தாசா(கேப்டன்), சகீப் அல் ஹசன், தமிம் இக்பால், சர்கார், முஸ்பிகுர் ரகீம், மொமினுல் ஹக், அபராத் சன்னி, லிட்டன் தாஸ், நாசிர் உசேன், சபீர் ரகுமான், தக்ஷின் அகமது, மிஸ்பிகுர் ரகுமான், தலுட்கர், ருபெல் உசேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து