முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் போட்டியில் தனது கேப்டன்சிப்: தோனி விளக்கம்

புதன்கிழமை, 17 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

மிர்பூர் -  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 பவுலர்களுடன் கோலி களமிறங்கியது குறித்து தோனி கூறும்போது, ஒவ்வொரு தனிநபரும் தலைமைத்துவ அணுகுமுறையும் வித்தியாசமானதாகவே இருக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தோனி, “இது ஒரு நல்ல கேள்வி. நாம் ஒருநாள் போட்டிகள் பற்றி பேசுவோம். ஒவ்வொரு தனிநபரும் வித்தியாசமனவரே. நீங்கள் அனைவரும் கேள்வி கேட்கிறீர்கள் ஆனால் உங்கள் கேள்வி வித்தியாசமாக இல்லையா அது போல்தான் இதுவும். 

அணி தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை நாம் இயல்பான நிலையில் அனைத்தையும் வைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் அதே சமயத்தில் தனிநபர்கள் வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம். அனைவரும் ஒரே மாதிரியாகச் செயல்படுவது விருப்பத்துக்குரியதல்ல. தனிநபர் குணாதிசியம் என்பது மிக முக்கியமானது” என்றார். இந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பற்றி தோனி கூறும்போது, “இரு அணிகளும் தொழில் நேர்த்தியுடன் ஆடினர். இரு அணிகளும் வெற்றி பெறுவதற்காக விளையாடினர்.

ஆனால் களத்தில் இரு அணியினரிடையே அமைதியான போக்கு நிலவியது என்பது என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான விஷயமாகும். இது நல்ல அறிகுறி. சரியான திசையில் செல்வதாகவே கருதுகிறேன்” என்றார். பெரிய அளவில் நல்ல வீரர்கள் கொண்ட குழு இருப்பது அவசியம். அவர்களும் நிறைய போட்டிகளை ஆடி வருகின்றனர், எனவே முன்னிலை வீரர்கள் காயமடையும் போது அவர்களுக்கு சரியான மாற்று வீரர்களை அணியில் எடுக்க சிறந்த மாற்று வீரர்களை கொண்ட குழு அவசியம்.

இப்போது புதிய சீசன் தொடங்கியுள்ளது. எனவே சிறந்த 11 வீரர்களை நாம் களத்தில் இறக்குவது அவசியம்.வங்கதேச அணி ஒருநல்ல ஒருநாள் போட்டி அணியாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சிறப்புற சீரான ஆட்டம் தேவை, வருங்காலத்தில் அதிலும் வங்கதேச அணி முன்னேறும் என நான் நம்புகிறேன்” என்றார் தோனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து