முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதநல்லிணக்கத்தின் பேரரசி முதல்வர் ஜெயலலிதா: மதுரை ஆதீனம் புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2015      தமிழகம்
Image Unavailable

மதுரை: மதநல்லிணக்கத்தின் பேரரசி முதல்வர் ஜெயலலிதா என்று மதுரை ஆதீனம் முதல்வருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா 1லட்சத்து 30 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். கவர்னர் ரோசையா தொலைபேசி மூலம் தனது வாழ்த்தை தெரிவித்தார். பதிவான வாக்குகளில் 88.43 சதவீதம் பெற்று முதல்வர் ஜெயலலிதா இந்திய அளவில் சரித்திற சாதனை படைத்துள்ளார். இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

முதல்வர் ஜெயலலிதாவின் சாதனை குறித்து மதுரை ஆதீன கர்த்தர் கூறியதாவது: முதல்வர் அம்மாவை யாராலும் வெல்ல முடியாது. காரணம் அவர் மதநல்லிணக்கத்தின் பேரரசியாக திகழ்கிறார். இந்துக்கள் புணித யாத்திரை செல்ல உதவித் தொகை, இஸ்லாமியர்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி, அவர்கள் ஹஜ் பயணம் செல்ல உதவித் தொகை, கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல உதவித்தொகை என்று எல்லோருக்கும் மதபாகுபாடு இன்றி நன்மைகளை செய்து வருகிறார். அவரது இந்த வெற்றி 2016 சட்டசபை தேர்தலிலும் தொடரும். காரணம் தமிழக மக்களையே அவர் தன் வாரிசுகளாக கருதுகிறார். அவருக்கென வாரிசுகள் இல்லை. மக்கள்தான் அவருக்கு வாரிசு. மக்களுக்காகவே பாடுபடும் அவரது வெற்றி என்றும் தொடரும். இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து