முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றில் நோவக் ஜோகோவிச்

வியாழக்கிழமை, 2 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

லண்டன்: 2-வது சுற்றில், ஆடவர் பிரிவில் பின்லாந்தின் நிமெனனை, செர்பியாவின் ஜோகோவிச் 6-4, 6-2, 6-3 என்ற செட்களில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.  போட்டித் தரவரிசையில் 5-வது இடத்திலுள்ள நிஷிகோரி, ஆடுதசைக் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். 2-வது சுற்றில் அவர் கொலம்பி யாவின் கிரால்டோவைச் சந்திக்கவிருந்தார்.

மேலும், பல்கேரியாவின் திமித் ரோவ், பெல்ஜியத்தின் காபின், ஆஸ்திரேலியாவின் டாமிக், பிரான்ஸின் காஸ்குட் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.  ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ், கனடாவின் நெஸ்டர் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் பூரவ் ராஜா பிரான்சின் மார்டின் ஜோடி முதல் சுற்றில் தோற்று வெளியேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து