முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தகார் விமான கடத்தலின் போது பயணிகளின் நலனை கருத்தில் கொண்டே முடிவு எடுத்தோம்: யஷ்வந்த் சின்கா

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட இந்திய விமானத்தை கடந்த 1999ம்ஆண்டு தீவிரவாதிகள் கடத்தி காந்தகாருக்கு(ஆப்கானிஸ்தான்) கொண்டு சென்றனர்.பயணிகளை விடுவிப்பதற்கு 3 தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தீவிர வாதிகள் கெடு விதித்தனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முந்தைய ஆட்சியின் போது இந்த விமான கடத்தல் சம்பவம் நடந்தது.

விமானத்தில் உள்ள பயணிகளை பத்திரமாக மீட்பதற்கு தேசிய பாதுபாப்பு மீதான அமைச்சரவை குழு அப்போது விவாதித்து குறிப்பிட்ட தீவிரவாதிகளை விடுவித்தது.

இந்த நடவடிக்கை தவறானது என்று தேசிய உளவுப்பிரிவின்(ரா) முன்னாள் தலைவர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார்.
இந்த பேட்டிக்கு பதில் அளிக்கும்வகையில் முந்தைய பாஜக அமைச்சரவையில் இருந்த யஷ்வந்த்சின்காவிளக்கம் அளித்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,

கடத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்பதிலேயே நாங்கள் முக்கிய கவனம் செலுத்தினோம்.அப்போது தேசிய பாதுகாப்பு மீதான அமைச்சரவை குழு இது குறித்து விவாதித்தது.அந்த குழுவில் நானும் உறுப்பினராக இருந்தேன்.

 நாட்டின் உயரிய அமைப்பான இந்த குழுவிமான கடத்தல் குறித்து தீவிரமாக விவாதித்து உரிய முடிவு எடுத்தது.
நாங்கள் 3தீவிரவாதிகளை விடுவிக்கா விட்டால் அந்த விமானம் அமிர்தசரசில் வெடித்து சிதறி இருக்கும். அதில் இருந்த பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கும்.அந்த விவகாரம் குறித்து இப்போது பேச வேண்டியதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்றொரு பாஜதலைவர் இந்த விமானம் கடத்தல் குறித்து கூறுகையில்,இந்திய விமானம் கடத்தப்பட்டபோது அதில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்பது தொடர்பாக அனைத்து அரசியல்கட்சிகளுடனும் விவாதித்தோம்எனவே  இந்த முடிவில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து