முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் காணிக்கை தலைமுடி ரூ.13.85 கோடிக்கு விற்பனை

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை -  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி ரூ.13.85 கோடிக்கு ஏலம் விடப்பட்டது., திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி மாதந்தோறும் முதல் வியாழக்கிழமையன்று ஏலம் விடப்படுகிறது. அதன் படி திருப்பதியில் உள்ள விற்பனை பிரிவு அலுவலகத்தில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ தலைமையில் ஆன்லைனில் தலைமுடி ஏலம் நடைபெற்றது. முதல் ரகம் 31 அங்குலத்திற்கு மேற்பட்ட தலைமுடியை 1 கிலோ ரூ. 25,563 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு 1,700 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்டது. 

இது விற்பனை ஆகவில்லை. 2 ரகம் 16 முதல் 30 அங்குலத்திற்குட்பட்ட தலைைமுடிகள் ரூ.20,041 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு 8000 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்டது. 6,500 கிலை தலைமுடி ரூ.13 கோடியே 2 லட்சத்திற்கு விற்பனையானது. 3வது ரகம் 10-15 அங்குல தலைமுடி ரூ.5,296 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு 49,200 கிலோ வைக்கப்பட்டதில் 1,200 கிலோ ரூ.68.58 லட்சத்திற்கு விற்பனையானது.

4வது ரகம் 5-9 அங்குலமுள்ள தலைமுடிகள் 4,400 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு மொத்தம் 10,300 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்டதில் 300 கிலோ வுக்கு ரூ.13.20 லட்சம் வருவாய் கிடைத்தது. 5-வது ரகம் 5 அங்குலத்திற்கு உட்பட தலைமுடிகள் ரூ.18 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு மொத்தம் 18,000 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதில் ரூ.5.40 லட்சம் வருமானம் கிடைத்தது. பழுப்பு நிற தலைமுடி ரூ.8,233 என விலை நிர்ணயம் செய்யப்பட்டதில் மொத்தம் 800 கிலோ விற்பனையாகவில்லை. இம்மாதம் காணிக்கை தலைமுடி மூலம் ரூ.13.85 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து