முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா சட்டசபை உறுப்பினராக பதவியேற்பு

சனிக்கிழமை, 4 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா சபாநாயகர் தனபால் முன்னிலையில் சென்னையில் சட்டசபை உறுப்பினராக நேற்று பதவியேற்றார்.  சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல், அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டார். இந்த தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதை தொடர்ந்து தோல்வியை முன்னரே உணர்ந்து கொண்ட திமுகவும் பிறகட்சியினரும் தேர்தல் புறக்கணிப்பு என்ற பெயரால் ஒதுங்கி கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இத்தொகுதியில் கடந்த 27 ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதியின் ஒட்டு எண்ணிக்கை கடந்த 30 ந்தேதி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா , 1-50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட 27 பேரும் டெபாசிட்டை இழந்தனர்.

இதையடுத்து நேற்று தலைமை செயலகத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, சட்டசபை சபாநாயகர் முன்னிலையில் சட்டசபை உறுப்பினராக பதவியேற்றார். அப்போது லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம்,நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமை கொறடா மனோகரன், மற்றும் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக தலைமை செயலகத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலாளர் ஞானதேசிகன், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தலைமை செயலக வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடம்பூர் ராஜூ, காஞ்சிபுரம் சோமசுந்தரம், செந்தமிழ் செல்வன், வாலாஜா கணேசன், முத்துசெல்வி,தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ தமிழரசன், முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் எம்.பிக்கள் அன்வர்ராஜா, கே.என். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் திரளாக திரண்டு முதல்வரை வரவேற்றனர்.

தலைமைசெயலகம் செல்லும் கடற்கரை சாலையில் வழிநெடுக அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் அவரை புரட்சித்தலைவி வாழ்க தமிழக முதல்வர் அம்மா வாழ்க என்று வாழ்த்தி வரவேற்றனர். தொண்டர்களின் வரவேற்பை முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சியுடன் கையசைத்து ஏற்றுக்கொண்டார். . இதன்பின்னர் தலைமை செயலகத்தில் இருந்து பகல்11-20 மணிக்கு போயஸ் கார்டன் திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து