முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ஷரபோவா

புதன்கிழமை, 8 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

லண்டன் - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்று விம்பிள்டன் டென்னிஸ் போட்டி காலிறுதியில் போட்டித்  தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஷரபோவா 6-3, 6-7(3), 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் கோகோ வந்தேவேகேவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்றில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கடும் போராட்டத்துக்குப் பிறகு 6-7 (6), 6-7 (6), 6-1, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்தார்.  கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த ஜோடி தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் நியூஸிலாந்தின் ஆர்டெம் சிடாக்-ஆஸ்திரேலியாவின் அனாஸ்டாஸியா ஜோடியைத் தோற்கடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து