முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்கில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய மோடி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: வெற்றி தினமான (விஜய் திவஸ்) நேற்றுகார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போது உயிர் நீத்த இந்திய வீரர்களை நினைவு கூறி மரியாதை செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி விஜய் திவஸாக அனுசரிக்கப்படுகிறது.16வது ஆண்டு கார்கில் வெற்றி தினம் நேற்றுநாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவத்தினர் கூடி உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், முப்படைத் தலைமைத் தளபதிபதிகள் ஆகியோர், அமர் ஜவான் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.டெல்லியில் தெளலா கான் பகுதியில் மராத்தான் ஓட்டமும் நடைபெற்றது. தண்டி யாத்திரை நினைவிடம், அக்பர் ரோடு, ஜான்பாத் வழியாக சென்ற மராத்தான் ஜந்தர் மந்தரில் நிறைவு பெற்றது.

பிரதமர் மோடி கார்கில் தினத்தையொட்டி டிவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார். அதில், தங்களது நாட்டுக்காக இன்னுயிரை ஈந்த அனைத்து வீரர்களுக்கும், அவர்களின் தியாகத்திற்கும் நான் தலை வணங்குகிறேன். வணக்கம்  செய்கிறேன்.இந்திய படையினரின் தியாகத்தையும், வீரத்தையும் நமக்கு பறை சாற்றும் தினம்தான் கார்கில் திவஸ் என்றும் கூறியுள்ளார் மோடி.கார்கில் போரில் இந்தியா 490 அதிகாரிகள், வீரர்கள், ஜவான்களை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து