முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரத்தில் கலாம் இறுதி சடங்கு நாளை நடக்கிறது பிரதமர் மோடி பங்கேற்கிறார்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கு நாளை(வியாழக்கிழமை) அவர் பிறந்த ராமேஸ்வரத்தில் நடக்கிறது. அங்கு அவரது உடல் அங்கு அடக்கம் செய்யப்படுகிறது. இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய ஆட்சியின் போதுஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவர்டாக்டர் ஏ.பி.ஜே  அப்துல் கலாம். அவர் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை ஜனாதிபதியாக இருந்தார். அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் உரை நிகழ்த்தி மாணவர்கள் உயர்ந்த இலக் கை அடைவதற்கு எழுச்சி மிக்க உரை நிகழ்த்தியவர். தமிழக பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகளிலும் அவர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மாணவர்களின் இதயம் கவர்ந்த தலைவராக திகழ்ந்தார்.அவர் அக்னி சிறகுகள் உள்ளிட்ட புத்தகங்களை எழுதி உள்ளார். வீணை வாசிப்பதில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர். அவர் எல்லா மதத்தினர் கோட்பாடுகளையும் விரும்பி படித்து வந்தார். இந்து மதத்தின் பகவத்கீதை மற்றும் இதர சமயங்களின் கருத்துகளையும் அவர் படித்தார்.

டாக்டர் அப்துல் கலாம் நேற்று முன்தினம்(திங்கட்கிழமை) மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங்கில்உள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.அவர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போதே திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக ஷில்லாங்கில் உள்ள பெத்தானி மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார். அவருக்கு அவருக்கு மாரடைப்பட்டு உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து