முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் ரைஸ் மரணம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன்: ஆல்ரவுண்டரான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான கிளைவ் ரைஸ் கேப்டவுனில் மரணமடைந்தார். அவருக்கு வயது 66.  அவர் சிறிது காலமாக மூளைக்கட்டி நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கேப்டவுன் மருத்துவமனையில் செவ்வாயன்று அவரது உயிர் பிரிந்தது. கடந்த மார்ச் மாதம் புற்று நோய் தொடர்பான சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வலது கை வேகப்பந்து வீச்சாளரும், பேட்ஸ்மெனும் ஆவார்.

ஆல்ரவுண்டரான கிளைவ் ரைஸ் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்தான் ஆடியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட காலத்தில் இவர் பெரும்பாலும் ஆடிவந்தார். தடை நீக்கமடைந்த பிறகு 1991-ம் ஆண்டுக்கு இந்தியாவுக்கு முதன் முதலாக வந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கிளைவ் ரைஸ் இருந்தார். ஆனால் அப்போதே அவருக்கு வயது 40-ஐ கடந்திருந்தது, இதனால் 1992 உலகக் கோப்பையை இழந்தார் இந்த அதிரடி ஆல்ரவுண்டர்.

1969-1994 வரையிலான அவரது கிரிக்கெட் வாழ்வில், முதல் தர கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவிலும் இங்கிலாந்து கவுண்டி அணியான நாட்டிங்கம் ஷயரிலும் ஆடியுள்ளார். 482 போட்டிகளில் 26,331 ரன்களை 40.95 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 930 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். லிஸ்ட் ஏ என்று அழைக்கப்படும் ஒருநாள் கவுண்டி போட்டிகளில் 479 ஆட்டங்களில் விளையாடி 13,474 ரன்களையும் 517 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

ஓய்வு பெற்ற பிறகும் கிரிக்கெட்டுடன் அவர் தொடர்பில் இருந்தார். 1999-2002-ல் நாட்டிங்கம் அணிக்கு பயிற்சியாளராகச் செயல் பட்டார் அப்போதுதான் கெவின் பீட்டர்சனை 2000-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தார். அப்போது தென் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு நகர பீட்டர்சன் முடிவெடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து