முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் இன்று பொது விடுமுறை: கடைகள் அடைப்பு

புதன்கிழமை, 29 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி: அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று சங்கங்கள் தெரிவித்துள்ளன. திரையரங்குகள் மாலை வரை இயங்காது.  அப்துல் கலாம் நல்லடககம், ராமேசுவரத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தமிழகத்தில் பொதுவிடுமுறை விட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வணிகர் சங்கங்களும் கடையடைப்பு நடத்துகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் டாக்டர் கலாம் மறைவுக்கு முதல்வர் ரங்கசாமி , துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங், அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் அமைப்புகள், பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினனர். இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை பொதுவிடுமுறை விட அரசு உத்தரவிட்டுள்ளது.  முதல்வர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் சிங் பிறப்பித்துள்ளார். டாக்டர் கலாம் நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் உடன் சென்றனர்.

இந்நிலையில் வணிகர்களும் கடையடைப்பு நடத்த முடிவு எடுத்துள்ளனர். வியாழக்கிழமை காலை 6 முதல் நல்லடக்கம் முடியும் வரை கடையடைப்பு செய்து இறுதி அஞ்சலி செலுத்த உள்ளதாக வர்த்தகசபை தலைவர் செண்பகராஜன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து