முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் குர்தாஸ்பூர் தீவிரவாதிகள் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: உள்துறை அமைச்சர்

வியாழக்கிழமை, 30 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தான் வழியாக ஊருருவி வந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் கடந்த 27ம்தேதியன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலில் போலீஸ் சூப்பரண்டு உள்பட 4போலீசார் மரணம் அடைந்தார்கள் .தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்து குர்தாஸ்பூரில் தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலில் போலீசாரும் பதிலடி தந்து அந்த தீவிரவாதிகளை சுட்டுகொன்றனர்.இருதரப்பினர் இடையே நடந்தமோதலின் போது பொதுமக்கள் 3பேரும் மரணம் அடைந்தார்கள்.

இந்த தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாநிலங்களவையில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்ததாவது, இந்தியாவின் பாதுகாப்பு உறுதியானது. எந்த தாக்குதலையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு உள்ளது.இந்தியாவில் தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பதற்கு இந்த அரசு உறுதி கொண்டுள்ளது.எல்லை வழியாக வரும் பயங்கர வாதத்தினை முறியடிப்பதற்கு அனைத்து நடவடிக் கைகளையும் அரசு மேற்கொள்ளும். பஞ்சாப் குர்தாஸ்பூரில் நடந்த தாக்குதல் குறித்து ஆய்வு செய்தபோது பாகிஸ்தான் எல்லை வழியாக தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி இருக்கிறார்கள்.அவர்கள் குர்தாஸ்பூர் மாவட்டம் தாஷ் பகுதி வழியாக வந்துள்ளனர்.தீவிரவாதிகள் வந்த பகுதியில் பாகிஸ்தானுக்கு செல்லும் ரவி நதி ஓடுகிறது.

குர்தாஸ் பூரில் ஊடுருவிய தீவிரவாதிகள் தல்வாண்டி ரயில்வே பாதையில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை வைத்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.அந்த வெடி குண்டுகள் வெடிக்காமல் செயலிக்கச்செய்யப்பட்டன. எல்லைப்பகுதியில் நமது பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.சமீபத்தில் பெய்த பெரு மழையின் காரணமாக எல்லை பகுதியில் ஓடும் நதிகளில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகிறது.அந்த நதியின் வழியாக பஞ்சாப்பிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள்.

கடந்த ஒரு மாதத்தில் ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதி வழியாக தீவிரவாதிகள் 5முறை ஊடுருவ முயன்றுள்ளனர்.இதில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.பஞ்சாப் போலீசார் தீவிரவாதிகளை எதிர் கொள்வதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.அங்குள்ள சூழலை உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.இது குறித்து பஞ்சாப் அரசிடம் மத்திய அரசு பேசி வருகிறது.குர்தாஸ்பூர் தாக்குதலின் போது எல்லை பாதுகாப்பு படையினரும் ராணுவத்தினரும் எல்லைப்பகுதியில் உஷார் படுத்தப்பட்டிருந்தனர்.குர்தாஸ் பூர் தாக்குதல் குறித்து பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலிடம் பேசி உள்ளேன்.அந்த மாநிலத்திற்கு மத்திய அரசின் உதவி அளிக்கப்படும் என தெரிவித்தேன்.

ஜூலை 27ம்தேதியன்று தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்து அதிகாலை 5.30மணிக்கு அங்குள்ள போலீஸ் நிலையத்தை தாக்கினர். அவர்கள் ராணுவ உடையில் வந்து இந்த தாக்குதலை நடத்தினார்கள்.அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே 12மணி நேர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 3தீவிரவாதிகளும் கொல்லப்பட்டார்கள். இந்த மோதலின் போது போலீஸ் சூப்பிரண்டு பல்ஜித் சிங் மரணம் அடைந்தார்.சுட்டுகொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஏகே 47துப்பாக்கிகள் மற்றும்19 துப்பாக்கி குண்டு பட்டைகள் மற்றும் 2ஜி.பி.எஸ் கருவிகள் கைப்பற்றப்பட்டன. குர்தாஸ் பூர் தாக்குதலில் மரணமடைந்த போலீசார்மற்றும் பொது மக்களுக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துகொள்கிறோம். இவ்வாறு உள்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராஜ் நாத் சிங் உரையாற்றிய போது காங்கிரசார் கூச்சல் போட்டனர். அப்போது அவைத்தலைவர் இருக் கையில் இருந்த துணை தலைவர் குரியன் இது அரசியல்  சார்ந்த விஷயமல்ல. நாட்டின் பாதுகாப்பு சார்ந்தது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து