முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல்கலாம் வசித்த வீட்டில் குழந்தைகள் அருங்காட்சியகம்: வெங்கைய்யா நாயுடு தகவல்

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

ராமேசுவரம் - டெல்லியில் அப்துல் கலாம் வசித்த வீட்டில் குழந்தைகள் அருங்காட்சியம் அமைப்பதாக மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார். ராமேசுவரத்தில் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அப்துல்கலாமின் விஷன் - 2020 மூலம் இளைஞர்கள், மாணவர்கள் ஈர்க்கப்பட்டு இன்று 5 லட்சம் பேர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல கலாம் வழிகாட்டுவார் என்ற தாக்கம் இளைஞர்கள், மாணவர்களிடம் ஏற்பட்டதால் இந்த அளவு மாபெரும் கூட்டம் திரண்டு பாராளுமன்ற கூட்டம் முறையாக நடக்காதது குறித்து அப்துல்கலாம் மேகாலயா மாணவர்களிடம் கடைசியாக வருத்தப்பட்டுள்ளார். 

வருங்காலத்தில் பாராளுமன்ற கூட்டத்தை முறையாக நடத்தி அவரது கடைசி ஆசையை நிவர்த்தி செய்வோம். அப்துல்கலாம் டெல்லியில் வசித்த வீட்டை குழந்தைகளுக்கான அருங்காட்சியமாக மாற்ற வேண்டும் என்று அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து பிரதமரிடம் பேசி, பரிசீப்பதாக உறவினர்களிடம் கூறி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous August 4, 11:26

    வாக்கால ஒழிங்களா அதையும் புடிங்கீட்டிங்களா, பாவம்டா துலுக்கன்கள்....

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து