முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் நேரடியாக வரும் பக்தர்களுக்கு ரூ.300 உடனடி தரிசன டிக்கெட் வழங்க முடிவு

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை: திருப்பதியில் நேரடியாக வரும் பக்தர்களுக்கும் ரூ. 300 உடனடி தரிசன டிக்கெட் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை - திருப்பதில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி திருப்பதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

ஆந்திராவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாசாவை பவ உற்சவம் நடத்தப்பட உள்ளது. தற்போது விசாகப்பட்டினம், குண்டூர் பகுதியில் சீனிவாசாவை பவ உற்சவம் நடந்து வருகிறது. அந்த நிகழ்ச்சியில் ஏழுமலையான் கோவிலில் நடக்கும் சுப்ரபாத சேவையில் இருந்து ஏகாந்த சேவை வரை அனைத்து பூஜைகளும் நடக்கும். நெல்லூர் மாவட்டத்தில் 8ம் தேதியில் இருந்து 14ம் தேதி வரை சீனிவாசா வைபவம் நடக்கிறது. அத்துடன் 15ம் தேதி வெங்கடாஜலபதி கல்யாண உற்சவமும் நடக்கிறது.

மேற்கண்ட இரு உற்சவங்களை எங்கள் பகுதியில் நடத்த வேண்டும் என பொது மக்கள் கேட்டுக் கொண்டால், அதன்படி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும். திருப்பதியில் உள்ள மாதவம் அல்லது விஷ்ணு நிவாசம் விடுதிகளில், ஏதேனும் ஒரு விடுதியில் தினமும் 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்துக்கு டிக்கெட் வழங்குவது தொடர்பாக அதிகாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும். திருப்பதி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்க, திருப்பதியில் உள்ள பாலாஜி, நீர் நிலையில் இருந்து கூடுதலாக குழாய்கள் பதித்து அதன் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மக்களுக்கும், பக்தர்களுக்கும் வினியோகம் செய்யப்படும். திருப்பதியில் 9 பிரதான சாலைகளை விரிவுப்படுத்தி சாலை ஓரம் பூஞ்செடிகள் அமைத்துப் பராமரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்