முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டுவீச்சில் ஐ.எஸ். இயக்கத்தின் துணைத் தலைவர் பலி: அமெரிக்கா தகவல்

சனிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்க போர் விமானங்களின் குண்டுவீச்சில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் 2-ம் நிலை தலைவர் கொல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து தனி இஸ்லாமிய நாடாக அறிவித்த ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன சர்வதேச நட்பு நாடுகளும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஈராக்கில் மொசூல் அருகே கடந்த 18ம் தேதி அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடந்தின. அப்போது ஐ.எஸ். இயக்க தலைவர்கள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசியதில் வாகனத்தில் இருந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இரண்டாம் தலைவர் ஃபாதில் அகமது அல்-ஹயாலி கொல்லப்பட்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

குண்டு வீசப்பட்ட வாகனத்தில் பயங்கர வெடிப் பொருட்கள் இருந்ததாகவும் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் அபு அப்துல்லா என்ற ஐ.எஸ்-ஸின் ஊடக தொடர்பாளரும் கொல்லப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ஃபாதில் அகமது, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் 2வது தலைவராக இருந்தார். ஈராக், சிரியா, லெபனானில் தாக்குதல் நடத்தும் பொறுப்பை இவர் வகித்து வந்தார். மேலும், அந்த இயக்கத்தின் நிதி நிர்வாகம், தகவல் தொடர்பு, ஆயுத கொள்முதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வந்தார். ஐ.எஸ். இயக்கத்தின் முதன்மை தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி ஆவார். ஃபாதில் அகமது கொல்லப்பட்டதால் ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கப் படைகளுக்கு முன்னேற்றச் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்