முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் புதிய அமைச்சரவை செப்-2ல் பதவியேற்பு

புதன்கிழமை, 26 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு: இலங்கையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில்பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய தேசியகட்சியும்(யு.என்.பி) இலங்கை சுதந்திரா கட்சியும் அதிக அளவில் இடங்களை கைப்பற்றின.இந்த இரு கட்சியினரும் இணைந்த அமைச்சரவை வருகிற செப்டம்பர் மாதம் 2ம் தேதியன்று பதவியேற்கவுள்ளது. இதுதொடர்பாக இரு கட்சிகள் இடையே ஒரு ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது.

புதிய அமைச்சரவை குறித்து ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் இலங்கை சுதந்திரா கட்சி இடையே நேற்று சுமூக முடிவு ஏற்பட்டது. இரு கட்சியினரும் இணைந்த அமைச்சரவை செப்டம்பர் மாதம் 2ம் தேதியன்று பதவியேற்க உள்ளது என்று யு.என்.பி கட்சியின் தலைவர் மலிக் சமர விக்ரம தெரிவித்தார்.

இலங்கையின் 19வதுஅரசியலமைப்பு திருத்தப்படி அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக் கை 30ஐ கடந்து இருக்கக்கூடாது.இந்த அமைச்சரவையை விரி வாக்கம் செய்வதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 45ஆக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சமர விக்ரம பதிலளிக் கையில்   ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த 17ம் தேதியன்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் யு.என்.பி கட்சி அதிக இடங்களை பெற்ற கட்சியாக இருந்தது. அந்த கட்சி 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கு 7 இடங்கள் குறைவாக இருந்தன. இந்த நிலையில் ஆட்சி அமைக்க இதர கட்சிகளின் உதவியை யு.என்.பி பெற வேண்டியிருந்தது.இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரம சிங்கே கடந்த வெள்ளிக்கிழமையன்று பதவியேற்றார். இந்த வாரம் திங்கட் கிழமையன்று 3 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்