முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் டெல்லி பேருந்துகளில் இலவச வை-ஃபை வசதி: கெஜ்ரிவல் தகவல்

புதன்கிழமை, 2 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - டெல்லி மாநகரப் பேருந்துகளில் இலவச வை-ஃபை வசதியை விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி தல்கதோரா விளையாட்டு அரங்கில், சிறந்த 10 போக்குவரத்து கழக டெப்போக்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பயணிகள் வசதியை முன்னிட்டு, டெல்லியில் உள்ள பேருந்துகளில் இலவச வை-ஃபை வசதியை விரைவில் அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்தார்.

இதற்காக, கூகுள், பேஸ்புக் மற்றும் எரிக்சன் போன்ற முக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். இந்த விழாவில், டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய், டெல்லி போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சி.ஆர்.கார்க் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்புக்கு டெல்லி மாநகர மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்