முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சானியா, லியாண்டர் பெயஸ் அதிர்ச்சி தோல்வி

சனிக்கிழமை, 5 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் - அமெரிக்க ஓபன் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவும், இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயசும் தோற்றதால்  ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தற்போது நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியனான சானியா மிர்சா மற்றும் ப்ருனோ சோரஸ் ஜோடி, செக் குடியரசின் ஆன்ட்ரியா மற்றும் லுகாஸ் குபோட் ஜோடியை எதிர்கொண்டது.

65 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 3-6 மற்றும் 3-6 என்ற நேர் செட்களில் சானியா ஜோடி தோல்வியை தழுவியது.  முன்னதாக நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லியாண்டர் பயர் மற்றும் ஸ்பெயினின் பெர்னான்டோ வெர்டாஸ்கோ இணை, 5-7, 6-4 மற்றும் 3-6 என்ற செட் கணக்கில், அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன்-சாம் குவர்ரே ஜோடியிடம் தோற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்