முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டன் ராணுவத்திற்காக டி-20அறக்கட்டளை கிரிக்கெட்டில் டோனி ஆடுகிறார்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி - பிரிட்டன் ராணுவத்தில்  நோயால் பலவீனமடைந்த வீரர்களுக்காகவும் காயம் அடைந்த வீரர்களுக்கு உதவவும் டி-20அறக்கட்டளை கிரிக் கெட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய ஒரு நாள் அணியின் காப்டன் டோனி ஆடுகிறார்.
லண்டனில் உள்ள கியா ஓவல் மைதானத்தில் பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு நல நிதி திரட்டும் டி-20கிரிக் கெட் போட்டி இன்று(வியாழன்)நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஒரு நாள் காப்டனான மகேந்திர சிங் டோனி ஆடுகிறார்.இந்த அறக்கட்டளை கிரிக் கெட் கதாநாயகர்களுக்கான கிரிக் கெட் என்ற தலைப்பில்  நடைபெறுகிறது. டோனி சமீபத்தில் இந்திய ராணுவத்தின் உயரிய பாரா பிரிகேடுடன் பயிற்சி பெற்றார். பிரிட்டனில் நடக்கும் அறக்கட்டளை கிரிக் கெட் போட்டியில்டோனியுடன் வீரேந்திர சேவக், பாகிஸ்தான் காப்டன் சாகித் அப்ரிதி தென் ஆப்பிரிக்க வீரர் ஹெர்ஷெலே கிப்ஸ் ஆகியோர் ஆடுகிறார்கள்.

இந்த போட்டியில் அவர்கள் ரெஸ்ட் ஆப் வேர்ல்டு லெவன் அணியுடன் ஆடுகிறார்கள். அந்த அணியில்பிரண்டன் மெக்கல்லம், மாத்யூ ஹைடன் மகிள ஜெயவர்த்தனே, கிரீம் ஸ்மித் மற்றும் நியூசிலாந்து  வீரர்கள் ஸ்காட் ஸ்டைரிஸ், மற்றும் டேனியல் வெட்டோரி ஆகியோர் ஆடுகிறார்கள். இந்த போட்டியில் ஆடுவதற்கு முன்னர் டோனி மற்றும் இதர வீரர்களுகக விருந்து அளிக்கப்படுகிறது. இந்த விருந்தினை பாதுகாப்புத்துறை செயலாளர் மைக் கேல் பாலன் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்ஆகியோர் அளிக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்