முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டென்னிஸ் தரவரிசை: செரினா வில்லியம்ஸ் முதலிடம்

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் - டென்னிஸ் தரவரிசையில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். சர்வதேச டென்னிஸ் சம்மேளனமானது மகளிர் ஒற்றையர் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவிலன் செரீனா வில்லியம்ஸ் 11,500 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். செரினாவுக்கு அடுத்தபடியாக 6,780 புள்ளிகளுடன் ரோமானிய வீராங்கனை சிமோனா ஹாலேப் 2வது இடத்திலும், 5,691 புள்ளிகளுடன் ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா 3-வது இடத்தை பிடித்துள்ளார். போலந்து வீராங்கனை ரட்வன்ஸ்கா 6 இடங்கள் முன்னேறி 3,190 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார். சமீபத்தில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற இத்தாலியின் ஃபிளாவியா பென்னட்டா ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்திலும், செர்பிய வீராங்கனை ஆனா இவானோவிக் மூன்று இடங்கள் முன்னேறி 9-வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்