முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க தேர்தல் விறுவிறுப்பு

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ‘பாண்டவர் அணி’ என்ற பெயரில் போட்டியிடும் நாசர், விஷால் மற்றும் நிர்வாகிகள் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

முன்னதாக கலைவாணர், எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர். பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்களாக பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடிகர், நடிகைகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருவதுடன், தமிழகம் முழுவதும் உள்ள நாடக கலைஞர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டனர்.நேற்று முன்தீனம் வேட்பாளர் முன்மொழிவு படிவத்தில் நடிகர் கமல்ஹாசன் கையெழுத்திட்டதுடன் தன்னுடைய முழு ஆதரவையும் இந்த அணிக்கு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணியளவில் நடிகர் விஷால் தலைமையில் நடிகர்கள் தி.நகரில் உள்ள கலைவாணர் சிலைக்கு மாலையணிவித்தனர். அதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினர்.

பின்னர் சிவாஜி மற்றும் காந்தி சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் செயல்பட்டு வரும் நடிகர் சங்க அலுவலகத்துக்கு வந்த அவர்கள் ஐவரும் காலை 9.30 மணியளவில் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இவர்கள் வருகையையொட்டி தேர்தல் அலுவலகம் எதிரே துணை நடிகர்கள், வெளியூர்களிலிருந்து வந்த நாடக நடிகர்கள் என குவிந்த வண்ணம் இருந்தனர். ‘மாற்றம் வேண்டும்’, ‘மாற்றம் தேவை’ என்று கோஷமிட்டனர்.

முன்னதாக தற்போதைய தலைவரான சரத்குமார் மீண்டும் அதே பதவிக்கு தனது வேட்பு மனுவை நேற்றைய தினம் தாக்கல் செய்தார். அவரோடு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஜயகுமாரும் வேட்புமனு தாக்கல் செய்தார். செயலாளர் பதவிக்கு ராதாரவியும், பொருளாளர் பதவிக்கு எஸ்எஸ்ஆர் கண்ணனும் போட்டியிடுகின்றனர். அவர்கள் இன்று பிற்பகல் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு சரத்குமார் நிருபர்களிடம் கூறும்போது, ‘நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம். நடிகர், நடிகைகள் உட்பட சின்னத்திரை கலைஞர்களும், நாடக்கலைஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் ரஜினிகாந்த்தை நாங்கள் சந்தித்தபோது அவர் எங்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்’ என்று கூறினார்எனினும் கமல்ஹாசன் தன்னுடைய ஆதரவை விஷால் அணிக்கு தெரிவித்துள்ள நிலையில் ரஜினிகாந்தும் தெரிவிப்பார் என்ற நம்பிக்கையில் பாண்டவர் அணியினர் உள்ளனர். அதற்கு அச்சாரமாக இன்று காலை நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அங்கு நடத்துவதற்கான அனுமதியையும் அவரே வழங்கி உள்ளார். ஆனால் எப்பொழுதும் போல இந்த விஷயத்தில் மவுனம் காத்து வருகிறார்.தேர்தல் அன்று தன்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை வாக்கு மூலம் தெரிவிப்பார் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்